ஐம்பது நாட்களாக நாம் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் அரசாங்கம் கவனயீனமாக இருப்பது கவலைக்குரிய விடயம் என்ற மட்டக்களப்பு பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றுவரும் சத்தியாக்கிரக போராட்ட பகுதிக்குள் பாம்பு ஒன்று புகுந்ததன் காரணமாக அங்கு சிறிது பதற்ற நிலையேற்பட்டது.
அத்துடன் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வருகைதந்த பிரித்தானிய பெண் ஒருவர் குறித்த போராட்டம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதில் கலந்துகொண்டுள்ளனர்.
வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் இதுவரையில் தெளிவான கருத்துகள் எதுவும் வெளிவராத நிலையிலேயே தமது போராட்டம் 50ஆவது நாளை எட்டியுள்ளதாகவும் பட்டதாரிகள் கூறியுள்ளனர்.
தமக்கான நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று (11) முன்னெடுத்த வேலையற்ற பட்டதாரிகள் வெளிநாட்டவர்களுக்கு எம்மேல் இருக்கும் அக்கறை கூட நாம் வாக்களித்து தெரிவு செய்த அரசியல்வாதிகளுக்கு இல்லாமல்போய்விட்டதாக பட்டதாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.