சமூக சேவை திணைக்கள வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அங்கீகாரம்

கடந்த பத்து வருடங்களாக சமூக சேவைத் திணைக்களத்தில் நிரப்பப்படாதிருந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது என்று சமூக வலுவூட்டல் மற்றும் நலனோன்புகை அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

சமூக அபிவிருத்தி நிறுவகத்தில் சமூக சேவை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (30) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சமூக சேவைகள் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்கள் கடந்த 10 வருடங்களாக நிரப்பப்படவில்லை. அதனை நிரப்புவதற்கான அனுமதிக்கு பல தடவைகள் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் நிராகரிக்கப்பட்டது. அனுமதியையடுத்து விரைவில் சமூக சேவை அதிகாரிகளை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று உலகில் அதிகமாக பேசப்படும் பத்து விடயங்களுக்குள் ஒன்றாக இன்று நீங்கள் கற்ற விடயம் உள்ளது. சமூகப்பணி, உளவியல் ஆற்றுப்படுத்தல் உயர் டிப்ளோமா, மகளிர் வலுவூட்டல் டிப்ளோமா மற்றும் மூப்பியல் மற்றும் முதியோர் பராமரிப்பு ஆகிய கற்கை நெறிகளை பூர்த்தி செய்துள்ள மாணவர்களாக நீங்கள் அவ்வெற்றிடங்களில் இணைய தகுதியானவர்கள்.

எனவே மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் கற்றலை மேற்கொண்டவர்கள் அவ்வெற்றிடங்களுக்கு விரைவில் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435