சவுதியில் சிம் அட்டையை பயன்படுத்துவதற்கு உங்களுடைய விரல் அடையாளத்தை பதிவு செய்ய வேண்டும் என்று நீங்கள் அறிவீர்களா? அவ்வாறு பதிவு செய்யாமல் சிம் அட்டையை பயன்படுத்துகிறீர்களாயின் உடனடியாக பதிவு செய்துகொள்ளுமாறு அந்நாட்டு தொலைதொடர்பு மற்றும் தொடர்பாடல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தகவல் தெரிவித்த ஆணைக்குழு சவுதியில் சிம் அட்டையை பயன்படுத்தும் அனைவரும் தத்தமது விரல் அடையாளத்தை பதிவு செய்வது மிகவும் அவசியம். இதற்கான சட்டம் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மாதம் ஜூலை மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யவேண்டியது அவசியம். அவ்வாறு பதிவு செய்யாதோரின் சிம் அட்டை செல்லுபடியற்றதாகும் என்றும் முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு ஆகிய இரு அட்டைகளுக்கு இப்புதிய சட்டம் செல்லபடியாகும் என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே சொந்த நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்களாகிய நீங்கள் உங்கள் சிம் அட்டைக்கான விரல் அடையாளத்தை பதிவு செய்துகொள்வதனூடாக அநாவசியமான பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ள முடியும்.
வேலைத்தளம்