மருத்துவ உதவியாளர்களின் தொழிற்சங்கம் இன்று (08) காலை அடையாள வேலைநிறுத்தமொன்றை ஆரம்பித்துள்ளது.
மருத்துவ உதவியாளர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுகொடுக்க அரசாங்கம் காட்டும் அசமந்தபோக்குக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இவ்வடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக மருத்துவ உதவியாளர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வடையாள வேலைநிறுத்தத்தில் ஆய்வுகூட உதவியாளர்கள், மருந்தாளர்கள், எக்ஸ்ரே தொழில்நுட்ப உதவியாளர்கள், உடற்கூறு சிகிச்சையாளர்கள் மற்றும் தொழிற்சார் சிகிச்சையாளர்கள் ஆகியோர் இணைந்துகொண்டுள்ளனர்.