றமழான் காலத்தில் பகிரங்கமாக, உணவு சாப்பிட்டு அகப்படும் நபருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை அல்லது 100 குவைத் டினார் அபராதம் விதிக்கப்படும். புலம் பெயர் தொழிலாளர் இவ்வாறு அகப்படும் பட்சத்தில் குவைத் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக தண்டிக்கப்படுவர்.
இக்காலப்பகுதியில் பள்ளிவாயில், கடைகள் மற்றும் வீதிகளில் பிச்சையெடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் அந்நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டுப் பணியாளர்கள் பிச்சையெடுக்கும் நடவடிக்கை பாரிய அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றமையினால் இத்தடை விதிக்க குவைத் அரசு தீர்மானித்துள்ளது.
குவைத் வீதிகளில் அவ்வாறான பிச்சையெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கண்டால் உடனடியாக 112 என்ற இலக்கத்திற்கு அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.
புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டம் தொடர்பில் புலம்பெயர் தொழிலாளர்கள் விழிப்புடன் இருப்பது இருப்பது நன்மை பயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்