பாடசாலை விளையாட்டு துறையை கட்டியெழுப்பும் நோக்கில் முதலாம் கட்டமாக 3386 பேர் விளையாட்டு பயிற்சி பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டதுடன் இரண்டாம் கட்டமாக 502 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் நேற்று (02) மஹரகம தேசிய கல்வியற் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வரலாற்றில் முதற்தடவையாக 3888 பேர் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக பாடசாலை கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதன்போது உரையாற்றிய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ,
சர்வதேச மற்றும் தேசிய அளவில் திறமை கொண்டோரை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக பாடசாலை கட்டமைப்புக்குள் உட் சேர்த்துள்ளோம். செயற்திறன்மிக்க விளையாட்டு வீரர்களை பயிற்றுவிப்பாளர்களாக பாடசாலைகளுக்கு இணைத்துக்கொண்டமை எண்ணி நான் மகிழ்ச்சி அடைக்கின்றேன்.பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை கொண்டோர் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கு எதிர்ப்பு வெளியிட்ட போதும் நாம் முயற்சியை கைவிடவில்லை என்றார்.
விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.