ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜா நகரில் வீதிப்போக்குவரத்து ஒழுங்குகளை கடுமையாக்கும் நோக்கில் 30 பன்முகத்தன்மை வாய்ந்த, அதி நவீன ரேடார் கமராக்களை அந்நாட்டு பொலிஸார் கண்காணிப்புக்காக பொருத்தியுள்ளனர்.
3G தொழில்நுட்பத்துடன் இயங்கும் இக்கமராக்கள் மலீஹா, ஷேக் முகம்மட் பின் ஜாயித் வீதி, அல் எதிஹாத் வீதி, எமிரேட்ஸ் வீதி மற்றும் சார்ஜா – தைது வீதி ஆகியவற்றில் இக்கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கமராக்கள் முன்னும் பின்னும் செயல்படக்கூடியவை. ஒரே தடவையில் பல போக்குவரத்து குற்றங்களை படம்பிடிக்க வல்லவை. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து உடனுக்குடன் அனுப்பக்கூடிய திறன் வாய்ந்தவை.
அதிவேகமாக செல்லும் மற்றும் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விடவும் குறைந்த வேகத்தில் செல்லும் வாகனங்கள், இரு வாகனங்களுக்கு இடையேயான இடைவெளி, அனுமதிக்கப்படாத உட்புற வீதிகளில் கணரக வாகனங்கள் செல்லுதல் என அனைத்தையும் இக்கமராக்கள் கண்காணிக்கும்.
கடுமையான போக்குவரத்து நெரிசலிலும் வீதி போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களை துல்லியமாக படம்பிடிக்க வல்ல இக்கமராக்கள், ஒவ்வொரு வாகன வகைக்கும் அனுமதிக்கப்பட்ட வேகக்கட்டுப்பாட்டை பிரித்தறியும் திறன் மிக்கவை என்றும் இவற்றின் வீடியோ பதிவுகள் நேரலை செய்யக்கூடியவை என்றும் சார்ஜா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நன்றி- உண்மையின் பக்கம்