​தோட்ட அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பில்

மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தோட்ட அதிகாரிகள் தொழிற்சங்கத்தினர் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தோட்ட அதிகாரிகள் தொழிற்சங்க செயலாளர் மாத் அமரதுங்க வேலைத்தளம் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

எமது தொழற்சங்கமானது 1920 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் எந்த அரசியல் தலையீடுகளை இன்றி சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றோம்.

கூட்டு ஒப்பந்த அடிப்படையிலேயே எமது அனைத்து செயற்பாடுகளும் இடம்பெறும். இந்த கூட்டு ஒப்பந்தமானது மூன்று ஆண்டுகளை கொண்டதாக காணப்படுகிறது. 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் அதை இரண்டு ஆண்டு காலத்தை கொண்டதாக மாற்றுமாறு கோரிக்கை முன்வைத்து நாம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

இந்த உடன்படிக்கை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. இந்த நிலையில் ஒக்டோபர் மாதம் முதல் சம்பள முறைமையை நூற்றுக்கு இருபத்தைந்து சதவீதமாக்க வேண்டும், அத்துடன் நிலுவை கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது எமது பிரதான கோரிக்கை ஆகும். மேலும் வருடாந்த சம்பள நிர்ணயத்தை நியாயமான முறையில் வழங்க வேண்டும்.

இந்த நிலையில் தோட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களை தவிர்ந்த ஏனைய அனைத்து மாதாந்த சம்பளம் பெரும் தோட்ட அதிகாரிகளும் என இந்த கோரிக்கைகளை முன்வைத்து எமது சங்கத்தின் கீழ் உள்ள சுமார் பத்தாயிரம் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இதற்கமைய எதிர்வரும் 19 ஆம் திகதி கண்டி, பதுளை, ரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

இதன்போது எமது கோரிக்கைகளுக்கு தோட்ட நிர்வாகம் கவனம் செலுத்தாவிட்டால் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தோட்ட அதிகாரிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அனைத்து தோட்ட நிர்வாகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435