ஊழியர் சேமலாப நிதியத்தினூடாக தொழிலாளருக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகளை தொழில் திணைக்களம் இல்லாமல் செய்து வருவதாக அரச சேவை தொழிலாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்தை 55 வயதாகும் போது பெற்றுக்கொள்ள முடிந்த போதும் வேறிடங்களில் பணியாற்றினால் வழங்காதிருக்க தொழில் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்று அரச சேவையாளர் சங்கத்தின் தலைவர் ஐ.ஜீகமகே தெரிவித்தார்.
எனினும் ஊழியர் சேமலாப நிதிய நன்மைகளை குறைப்பதற்கு எந்தவித தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை என்று தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளனர்.