ரமழான் மாதத்தை முன்னிட்டு தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர் ஆறு மணி நேரம் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் மீறும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்டார் நிர்வாக அபிவிருத்தி தொழில் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
எனவே நிறுவனங்கள் தொழிலாளர் உரிமையை பாதுகாக்கும் வகையிலும் நாட்டின் சட்டத்தை பேணும் வகையிலும் செயற்படுமாறும் அவ்வமைச்சு எச்சரித்துள்ளது.