ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றும் இலங்கையர்களின் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைக்கு எதிராக சட்டவடிக்கை மேற்கொள்ளல் போன்றவவை தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று நேற்று (15) கைச்சாத்திடப்பட்டது.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரளவும் ஐக்கிய அரபு இராச்சியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாட்டு மனித வள அமைச்சர் நஸார் தானி அல் ஹமாலியும் கைச்சாத்திட்டனர்.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது கைச்சாத்திடப்பட்டதுடன் சட்டவிரோத ஆட்கடத்தல் வியாபாரத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை கடுமையாக்க இயலுமாகும். இதனூடாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றும் இலங்கையர்களின் பாதுகாப்பான முறையில் பணியாற்றுவது உறுதிபடுத்தப்படும். என்று இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.